திலித் ஜயவீரவின் மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம்
நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தாக்கல் செய்த ரிட் மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(30.09.2026) நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி கொழும்பு கோட்டை நீதவான் தனக்கெதிராக வழங்கிய தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனு தள்ளுபடி
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய, நீதியரசர் சமத் மொராயஸ் மற்றும் நீதியரசர் ஆதித்ய பட்டபெதிகே ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் அமர்வினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் தனக்கெதிராக மேற்கொண்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தியே திலித் ஜயவீர இம்மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
எனினும், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு தீர்மானித்துள்ளது.