நாமல் ராஜபக்சவை திட்டித் தீர்த்த சிறைக்கைதி! நீதவான் கடும் உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து சிறைக் கைதியொருவர் கடுமையாகத் திட்டிய சம்பவம் தொடர்பில் அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்றையதினம்(29.09.2026) நாமல் ராஜபக்ச கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றுக்காக சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்பட்டிருந்தார்.
நாமலுக்கு விசேட பாதுகாப்பு
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக் கைதிகள் தங்க வைக்கப்படும் இடத்தில் நாமல் சற்று நேரம் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

அதன்போது சிறைக் கைதியொருவர் நாமல் ராஜபக்ச அருகில் வந்து அவரைக் கண்டபடி திட்டித் தீர்த்துள்ளார்.
இதனையடுத்து கோபம் கொண்ட இன்னொரு கைதி, நாமல் ராஜபக்சவைத் திட்டிய கைதி மீது சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து நாமல் ராஜபக்சவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, நாமல் ராஜபக்சவுக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு கோட்டை மாஜிஸ்திரேட் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO..
சென்னை 28 படத்தின் 3வது பாகமா.... அட்டகாசமாக வந்த அறிவிப்பு, எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்... Cineulagam