நீதிமன்றில் வாசிக்கப்பட்ட முன்னாள் அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பில் பொய்யான ஆதாரங்களைக் காட்டியதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் வாசிக்கப்பட்டன.
2016ஆம் ஆண்டு பெப்ரவரி 28ஆம் திகதி, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம், ராஜகிரியவில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி அதில் பயணித்தவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்களை ஏற்படுத்தியதாக கூறி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அவரது அப்போதைய வாகன சாரதி திலும் துசித குமார மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடல ஆகியோர் சாட்சியங்களை பொய்யாக்கியமை மற்றும் மறைத்தமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான குற்றச்சாட்டுகளே இன்று நீதிமன்றில் வாசிக்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 23 நிமிடங்கள் முன்

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
