ஷானி அபேசேகரவின் பாதுகாப்பு தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
விசேட அதிரடிப்படை பாதுகாப்பை சீ.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தான் உயிரச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகவும், தனக்கான பாதுகாப்பொன்றை ஏற்பாடு செய்து தருமாறும் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
மனு மீதான விசாரணை
இந்நிலையில் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு நேற்று(21.02.2024) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதன் போது ஷானி அபேசேகரவின் பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை வழங்குவதற்கான சாத்தியம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மனு மீதான விசாரணைகளை இம்மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |