திருகோணமலை விடுதியில் சுமந்திரன் நடத்திய அதிமுக்கிய சந்திப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவிற்கு முதல் திருகோணமலையில் சுமந்திரன் முக்கிய சந்திப்பொன்றை நடத்தியிருந்ததாக தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் நிர்வாக செயலாளர் எஸ்.தர்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த சந்திப்பின் போது செயலாளராக குகதாசனை நியமிப்பதற்கு தான் உடன்படவில்லை என்பதை சுமந்திரன் வெளிப்படையாக பேசியிருந்தார்.
தான் தலைவராக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தனுக்கு தான் வழங்குகின்ற முதலாவது செய்தியாக திருகோணமலை மாவட்ட கிளை கலைக்கப்படுகிறது என்ற செய்தியை வழங்கி, அந்த புனரமைப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.
அதேபோல செயலாளர் பதவிக்கு குகதாசனை நியமிக்க மாட்டேன் எனவும் அவர் கூறியிருந்தார் என தர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri