கனடாவிலிருந்து புறப்பட்ட விமானத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்
கனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கனடா விமானம் கடந்த 19ஆம் திகதி கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து நியூஜெர்ஸியிலுள்ள Newark என்னுமிடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது மதியம் 12 மணியளவில் அந்த விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் சோதனை
விமானிகள் அந்த விமானத்தை பாதுகாப்பாக Newark லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளதோடு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும். யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
மோப்ப நாய்கள் உதவியுடன் பொலிஸார் அந்த விமானத்தை சோதனையிட்ட பின், அந்த விமானத்தில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், விமான நிலைய பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |