இலங்கையில் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டம்: நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
இலங்கையில் ஓபியம் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களின்படி, ஆபத்தான மருந்தின் அளவு 10 கிராமுக்கு குறைவாக இருக்கும் போது, ஒருவருக்குப் பிணை வழங்க மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு திருத்தச் சட்டப்பிரிவின்கீழ், மேல் நீதிமன்றம் ஒன்று இந்த விடயத்தில் பிணை வழங்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதாக, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் அபயகோன் மற்றும் பி.குமாரரத்தினம் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம்
ஒருவரால் வைத்திருந்ததாக அல்லது கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆபத்தான
போதைப்பொருளின் தூய்மையான அளவு 10 கிராமுக்குக் குறைவாக இருந்தால், அது
தொடர்பில் சட்டமா அதிபரின் செயற்பாடு இல்லையென்றால், 12 மாத காவலுக்குப் பிறகு
அவரை பிணையில் அனுமதிப்பைத் தவிர மேல் நீதிமன்றத்துக்கு வேறு வழியில்லை என்றும்
மேன்முறையீட்டு நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |