உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக்கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் இன்று (05) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதல் மற்றும் இரண்டாம் முறையாக தோற்றவுள்ள ஐந்து மாணவர்கள் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.