இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாய் வைப்பு செய்த மர்ம நபர்
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கில் 50,000 ரூபாவை வைப்பிலிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் இன்று (16) முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணைகள்
சந்தேகநபர் இந்த பணத்தை பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்களிடமிருந்து பெற்றாரா என்பதைத் தீர்மானிக்க விசாரணைகள் நடைபெற்று வருவதாலும், விசாரணைகள் இன்னும் முடிவடையாததால், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
இதேவேளை, நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைத்த கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள், சந்தேகநபர் இஷாரா செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றியதாக தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
கொலை நடந்த நேரத்தில் இந்த பணம் வைப்புச் செய்யப்பட்டதாகவும், பணம் சந்தேகநபரின் கணக்கில் இணையவழி ஊடாக வைப்பிலிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
