உதய கம்மன்பிலவுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிறுவனப் பங்குகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (21) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ்.சப்புடா முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது..
20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிறுவனப் பங்குகள்
இந்நிலையில், வழக்கை நவம்பர் 21 ஆம் திகதி விசாரணைக்காக மீண்டும் அழைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அவுஸ்திரேலிய தொழிலதிபர் பிரையன் ஷாடிக் என்பவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிறுவனப் பங்குகளை போலி அதிகார பத்திர உரிமம் மூலம் தயாரித்து முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



