பிணை வழங்குவதில் ஏற்படவுள்ள சிக்கல்! ரணில் ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (24) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை பிற்போக்கானதாக மாற்றும் வகையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே கருத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும் என தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறான அறிக்கைகள் பொதுமக்களின் அதிருப்தியை அதிகரிக்கும் பட்சத்தில், முன்னாள் ஜனாதிபதிக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக அமையலாம் என சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்துவது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடு நீதித்துறை தொடர்பில் மக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், அரசியல் நலன்களுக்காக இந்த நிகழ்வு இடம்பெறுவதாக சமூகமயப்படுத்த முயல்வது தவறு எனவும் இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
