ரணில் விக்ரமசிங்க ஆபத்தான நபர்! அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை
ரணில் விக்ரமசிங்க ஆபத்தான நபர். அவரது கடந்த காலம் பட்டலந்த சித்திரவதை இல்லத்தை நடத்துவது போன்ற குற்றச்சாட்டுகளால் கறைபட்டது என முன்னிலை சோசலிச கட்சியின் செயற்பாட்டாளர் துமிந்த நாகமுவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறித்து முன்னிலை சோசலிசக் கட்சி (FLSP) சார்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பாராட்டு
இது தொடர்பில் மேலும் கூறுகையில், "ரணில் விக்ரமசிங்க ஒரு ஆபத்தான நபர்.பாம்பை காயப்படுத்தி கொல்லாவிடில் அது பதிலடி கொடுக்கும்.
இராஜதந்திர சமூகத்தின் சில பிரிவினரின் அழுத்தங்களையும் மீறி அரசாங்கம் விக்ரமசிங்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத்தை நாம் பாராட்டுகின்றோம். அத்துடன் ரணிலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமது கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும்.''என தெரிவித்துள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
