ரணிலுக்கு ஆதரவாக கொழும்பில் ஒன்று திரண்டுள்ள அரசியல் முக்கியஸ்தர்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதினை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து பங்கேற்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று தற்போது கொழும்பில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஜி.எல் பிரீஸ், சாகர காரியவசம், மனோகணேசன், மகிந்த யாப்பா அபேவர்த்தன, பாட்டலி சம்பிக்க ரணவக்க,தயாசிறி, சுசில் பிரேமஜெயந்த, ரவூப் ஹக்கிம், தலதா அதுகோரல ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
மைத்திரிபால சிறிசேன
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது. எனவே அவரை விடுப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும், சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுக்கவுள்ளதாக எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன்
மேலும், அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பட்டலந்த வதை முகாம், இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே, அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.
எனவே அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருந்தால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைந்து இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருக்க தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.






விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri
