கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கை ஏற்றது மேன்முறையீட்டு நீதிமன்றம்
கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கை இன்றிலிருந்து முழுமையாக ஏற்றுக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு இன்றைய தினம் (24.11.2023) விடுக்கப்பட்டுள்ளது.
அதில் உள்ள அனைத்து பிரதிவாதிகளுக்கும் மற்றும் இடைமனுதாரர்களுக்கும் வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் மனுதாரரால் முன்வைக்கப்பட்ட பிரதான விடயத்திற்கு மறுப்பு தெரிவிப்பதற்கான காரணத்தையும் நீதிமன்றுக்கு தெளிவுபடுத்துமாறு எழுத்துமூல அறிவித்தல் வழங்கியுள்ளது.
இடைமனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தொடர்பிலான நிலைப்பாடு
இதனை தொடர்ந்து இடைமனுதாரர் மற்றும் பிரதிவாதிகள் தொடர்பிலான நிலைப்பாட்டை எதிர்வரும் 17.01.2024 அறிய நீதிமன்றம் இத் திகதியை தீர்மானித்துள்ளது.
மேலும் வழக்கின் அடிப்படையில் வழமையாக முறையில் வடக்கு பிரதேச செயலக நடவடிக்கைகள் தொடரும் என்பதோடு அதன் சுயாதீனத்தை பாதிக்கும் எவ்விதமான தலையீட்டுக்கும் இடமளிக்கபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.