அம்பாறையில் மனைவியை தாக்கிய கணவன் தலைமறைவு..!
தம்பதிகள் இடையே கருத்து முரண்பாடு காரணமாக தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வாசல் அருகில் உள்ள கடற்கரைப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(2) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட மனைவி கணவன் மீது முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளார்.
தலைமைறைவாகியுள்ள குடும்பஸ்தர்
குறித்த முறைப்பாட்டிற்கமைய பெண்கள் சிறுவர் முறைப்பாட்டு பிரிவு பொலிஸ் குழுவினர் தேடுதல் மேற்கொண்டு தலைமைறைவாகியுள்ள குடும்பஸ்தரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் சுமார் 38 வயதுடைய நிந்தவூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
