சமூக பிறழ்வான காணொளி பதிவு: பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய இளம் தம்பதியினர்
பாடசாலை சீருடையுடன் சமூக பிறழ்வான காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ருவன்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆண் சந்தேக நபர் பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணை
இவர்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு திருமண விழாவும் நடைபெற உள்ளதாகவும், இருவரும் பட்டதாரிகள் என்பது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணம் சம்பாதிப்பதற்காக குறித்த காணொளிகளை தயாரித்து இணையத்தில் வெளியிட்டதாக அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இருவரும் கைது செய்யப்பட்ட போது, காணொளி தயாரிப்புக்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் கணினி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்படுள்ளன.
பிலிமத்தலாவ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இருந்த குறித்த தம்பதி தொடர்பில் கடுகன்னாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகன்னாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வரவு செலவுத்திட்டத்தில் புறந்தள்ளப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள்: சாணக்கியன் காட்டம் (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |