அரசியல் நிலைப்பாட்டை இஸ்ரேல் மாற்றிக் கொள்ள வேண்டும்: அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
உலகத்தின் பார்வையை ஈர்த்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தத்தில் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.
இஸ்ரேல் தெற்கு காசா பகுதிகளை குறிவைத்து பாரிய தாக்குதகளை நடத்தி வருகிறது. குறித்த தொடர் தாக்குதல்களில் 18,000ற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தகவல் வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஜோ பைடன் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பான நிகழ்வில் உரையாற்றுகையிலேயே ,மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
நெதன்யாகுவின் அரசியல் நிலைப்பாடு
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸ் படை மீதான தாக்குதலில், பாலஸ்தீன மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதேநிலை தொடர்ந்து நீடித்தால் இஸ்ரேல் மிக கடினமான நிலையை சந்திக்க நேரிடும்.
இஸ்ரேலின் இலக்கு
இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழந்து வருகிறது. அமெரிக்க பாதுகாப்பு ஆலோகரான ஜேக்கப் சல்லிவன், இஸ்ரேல் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளார்.
மேலும், இஸ்ரேலுக்குத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
"ஹமாஸை அழித்து பிணைக் கைதிகளை மீட்கும் இஸ்ரேலின் இலக்கை அமெரிக்கா ஆதரிக்கிறது.
இருப்பினும், காசா போருக்குப் பின்னர் என்ன நடக்க வேண்டும் என்பது குறித்து நட்பு நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன" என நெதன்யாகு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
