இந்தியாவையும் பாகிஸ்தானையும் பேச்சுக்கு அழைக்கும் முக்கிய நாடுகள்
அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே பகைமை அதிகரித்து வருவதால், இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்று ஜி 7 என்ற ஏழு முக்கிய நாடுகள் குழு வலியுறுத்தியது.
கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அமைச்சர்கள் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.
2025 ஏப்ரல் 22 அன்று இந்தியா நிர்வகிக்கும் காஸ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட இஸ்லாமிய போராளித் தாக்குதலை கடுமையாகக் கண்டிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கான அழைப்பு
இந்தநிலையில், உடனடியாக பதற்றத்தைத் தணிக்க இரண்டு தரப்புக்கும் அழைப்பு விடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளரும் இரண்டு நாடுகளையும் தொடர்பு கொண்டு மோதலை தவிர்த்து, பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |