இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றத்தின் எதிரொலி : இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக வெற்றிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெற்றிலை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளமையால் கராச்சிக்கான வெற்றிலை ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய, எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
வெற்றிலை கொள்வனவு
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு அதிகளவான வெற்றிலை ஏற்றுமதி இடம்பெறுகிறது.
வாரத்தில் இரு நாட்களுக்கு விவசாயிகளிடமிருந்து வர்த்தகர்கள் வெற்றிலையைக் கொள்வனவு செய்கின்றனர்.
எனினும், விமான சேவை நிறுத்தப்பட்டமையினால் வெற்றிலைகள் விமான நிலையத்தில் தேங்கியுள்ளதாகவும் எப்பலதெனிய வெற்றிலை விவசாய நல சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகர்கள் வெற்றிலைகளைக் கொள்வனவு செய்யாமையினால் உள்நாட்டுச் சந்தைக்கு வரும் வெற்றிலையின் அளவு அதிகரிக்கும் எனவும் எதிர்காலத்தில் வெற்றிலையின் விலை குறைவடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri
