கலால் வரி திணைக்களத்தில் ஊழல் : சமூக ஆர்வலர்கள் போராட்டம்

Sri Lanka SL Protest Excise Department of Sri Lanka
By Rakesh Jun 09, 2026 11:16 AM GMT
Report

கலால் வரித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் முறைகேடுகள் மற்றும் ஊழல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இராஜகிரியவில் அமைந்துள்ள அதன் தலைமை அலுவலகத்திற்கு முன்பாகச் சமூக ஆர்வலர்கள் குழுவினர் நேற்று(08) கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தின் போது, சுயதொழில் சங்கத்தின் தலைவரும் சமூக ஆர்வலருமான பிரதீப் சார்ல்ஸ் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், திணைக்களத்தின் தற்போதைய ஆணையாளர் பிரேமரத்ன மற்றும் 'வி&ஏ' மதுபான நிறுவனத்தின் உரிமையாளர் வஜிர குணசேகர ஆகியோருக்கு இடையில் இருக்கும் சட்டவிரோத நெருக்கம் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

16 வருட சிறை! பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு சென்ற சரண குணவர்தன

16 வருட சிறை! பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு சென்ற சரண குணவர்தன

மோசடிகளை மூடிமறைக்க

அவர் மேலும் குறிப்பிடுகையில், "கலால் வரி ஆணையாளர் பிரேமரத்ன, அண்மையில் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு 'வெசல்' ரக மோட்டார் வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்.

கலால் வரி திணைக்களத்தில் ஊழல் : சமூக ஆர்வலர்கள் போராட்டம் | Corruption Excise Depart Social Activists Protest

இதற்கான நிதி அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து, அதன் பின்னாலுள்ள லஞ்ச ஊழல் விவரங்களுடன் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

சோளத்தைக் கொண்டு சட்டப்படியாகத் தயாரிக்கப்பட வேண்டிய மதுபானங்களை, வஜிர குணசேகரவின் 'வி&ஏ' நிறுவனம் அதிக லாபத்தை நோக்கமாகக் கொண்டு, சர்க்கரையைப் பயன்படுத்தித் தரமற்ற முறையில் தயாரித்து வருகின்றது.

இந்த பாரிய மோசடிகளை மூடிமறைக்கவே கலால் வரி ஆணையாளர் அவருக்குத் துணை போகிறார்" என்று குற்றம் சாட்டினார். 

மூவரின் தொலைபேசி அழைப்பு விவரங்கள்

தற்போதைய நிதி அமைச்சரின் தாயார் மறைந்த போது, அதற்கான ஒட்டுமொத்த இறுதிச்சடங்குச் செலவுகளையும் இந்த மதுபான நிறுவன அதிபர் வஜிர குணசேகரவே ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் மூலம் அரசின் உயர் மட்டத்தினரையும் இவர்கள் தங்களது பண பலத்தால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர் என்பது தெளிவாகின்றது.

கலால் வரி திணைக்களத்தில் ஊழல் : சமூக ஆர்வலர்கள் போராட்டம் | Corruption Excise Depart Social Activists Protest

இந்த ஊழல் வலையமைப்பை அம்பலப்படுத்த, பிரதி நிதி அமைச்சர், கலால் வரி ஆணையாளர் மற்றும் வஜிர குணசேகர ஆகிய மூவரின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஜனாதிபதி உடனடியாகப் பெற்று விசாரணை செய்ய வேண்டும்.

இந்த ஒட்டுமொத்த இலஞ்ச ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து இலஞ்ச ஊழல், ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறையான ஆவணங்களுடன் எம்மால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஊழல்வாதிகளைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அடுத்த கட்டமாகச் கடுமையான முறையில் 'மரணச் சவப்பெட்டி' மற்றும் 'மலர்வளையங்களை' ஏந்தியவாறான பாரிய போராட்டங்கள் திணைக்களத்துக்கு முன்னால் வெடிக்கும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர் சரிவில் இலங்கை ரூபாவின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

தொடர் சரிவில் இலங்கை ரூபாவின் பெறுமதி! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி

GalleryGalleryGalleryGalleryGallery
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US