மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி
நிட்டம்புவை பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தின்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் படுகாயமடைந்த நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நிட்டம்புவை - ருக்கஹவில பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.
இவர் கடமைகளை முடித்துவிட்டு மீண்டும் வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri