ஹட்டனில் இடம்பெற்ற விபத்து! 3 பேர் படுகாயம்
தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று(19) பிற்பகல் 3.30 மணியளவில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் சென்ஜோண்டிலரி தோட்டப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
3 பேர் படுங்காயம்
இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,
தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
டிப்பர் லொறியில் இருந்த மூன்று பேர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்திலிருந்து ஹட்டன் வனராஜா தோட்டத்திற்கு தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற டிப்பர் லொறியில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக லொறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நோர்வூட் பொலிஸார், விபத்து நடந்த நேரத்தில் டிப்பர் லொறியில் ஏழு பேர் பயணித்ததாக தெரிவித்துள்ளனர்.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 18 மணி நேரம் முன்
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam