மட்டக்களப்பில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று(31) பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இ.சிறிநாத், பிரதேச செயலாளர் சீ.சுதாகரன், பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், பட்டிப்பளை பிரதேச சபை தவிசாளர் கிரேஸ்குமார், கிராம சேவையாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
திறந்த விவாதம்
கூட்டத்தின் ஆரம்பத்தில் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் அதனது வேலை திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பாகவும் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு எதிர்கால திட்டங்கள் தொடர்பாக யோசனைகள் மன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், விவசாயம், வீதி அபிவிருத்தி, மின்சாரம் நீர்ப்பாசனம் வனவிலாக, வன ஜீவ, மீன்பிடி ஆகிய துறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதன் தேவைப்பாடுகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்து அவற்றுக்கான தீர்வுகளை வெகு விரைவில் செய்வதாகவும் சில துறைகளில் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை சிறந்த முறையில் ஒழுங்காக முன்னெடுத்து தருவதாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் விசேடமாக பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனை தொடர்பில் ஒரு திறந்த விவாதம் நடைபெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri

சீனாவுக்கு புதிய நெருக்கடி... முதல் தாக்குதலுக்கு தயாராக ஜப்பான்: இந்த இடத்திலிருந்து குறி News Lankasri
