ஆணவத்தால் தவறிய முயற்சிகள் - மோடியிடம் கோஹ்லி ஒப்புதல்
நடந்து முடிந்த உலகக்கோப்பையின் ஆரம்ப போட்டிகளில் நான் எடுத்த முயற்சிகள் எனது ஆணவத்தினால் பலனளிக்காமல் போனது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli) இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் (Narendra Modi) தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை வெற்றிக்கு பின்னர் இந்தியப் பிரதமரை சந்தித்து கலந்துரையாடும் போதே கோஹ்லி இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய ஆரம்பப் போட்டிகளில் விராட் கோஹ்லி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
உத்வேகம்
எனினும், இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற விராட் கோஹ்லி அடித்த 76 ஓட்டங்கள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியது.

தொடர் முழுவதும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் அணியின் பயிற்றுவிப்பாளர் ராகுல் டிராவிட் மற்றும் அணித்தலைவர் ரோஹித் சர்மா ஆகியோர் தனக்கு உத்வேகம் அளித்ததாகவும் விராட் கோஹ்லி மோடியிடம் தெரிவித்திருந்தார்.
அத்துடன், ராகுல் டிராவிட்டிடம் தனது ஆணவமே இந்த மோசமான துடுப்பாட்டத்துக்கு காரணம் எனவும் கோஹ்லி கூறியுள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam