பரீஸ் ஒலிம்பிக்கில் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள பாலின விவகாரம்
பரிஸ் ஒலிம்பிக்கின் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப்கின் வெற்றியானது பெறும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியின் 16வது சுற்று நேற்று நடைபெற்றது.
இதில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி மற்றும் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த இமானே கெலிஃப் ஆகியோர் மோதினர்.
பாலின தகுதி
இதற்கிடையே கடந்த 2023ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை செம்பியன்ஷிப் போட்டியின் போது இமானே கெலிஃப் ஒரு பயாலஜிக்கல் ஆண் என அறியப்பட்டதால் தனது பாலின தகுதியை நிரூபிக்கச் சோதனை நடத்தப்பட்டது.
அச்சோதனையில் இமானே கெலிஃப் தோல்வியடைந்தார். இதன் காரணமாக அவரை உலக குத்துச்சண்டை பேரவை தகுதிநீக்கம் செய்தது.

இருப்பினும் தற்போது நடந்துவரும் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் எந்த விதமான சோதனையும் செய்யாமல் பயாலஜிக்கல் ஆண் என்று அறியப்படும் இமானே கெலிஃப் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் ஆரம்பம் முதலேயே சர்ச்சையைக் தோற்றுவித்து வந்த நிலையில்இ நேற்ற இடம்பெற்ற போட்டியில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கிரினி 46 நொடிகளிலேயே தனது மூக்கு உடைந்த நிலையில் போட்டியிலிருந்து வெளியேறினார்.
எஞ்சலா கரினி
இதனையடுத்து இப்போட்டியில் கெலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இச்சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பேசும்பொருளாக மாறியுள்ளது.
மேலும் எஞ்சலா கரினிக்கு ஆதரவாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏஞ்சலா கரினி,

"தான் அப்போது தன்னுடைய மூக்குப் பகுதியில் கடுமையான வலியை அனுபவித்ததாகவும், இதுவரை இந்த மாதிரியான வலியை நான் அனுபவித்ததே இல்லை எனவும் கூறினார்.
இதன்காரணமாக இப்போட்டியைத் தொடர விரும்பவில்லை என்றும் இத்துடன் போதும் என்ற முடிவை எடுத்ததாகக் கூறினார்.
இதனால் போட்டியை முடிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam