முழு நாட்டுக்கும் ஆபத்தாக மாறும் செயல்! ஜனாதிபதியை பதவி விலக கோரி நாமல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள்
வெசாக் காலத்தில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிறைக்கைதி ஒருவரின் பொதுமன்னிப்பு விவகாரம் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொறுப்பேற்கத் தவறியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ஜனாதிபதியின் செயலால் ஏற்பட்ட தவறுக்கு அவர், அரசாங்க அதிகாரிகளையோ அல்லது சிறைத்துறையையோ குற்றம் சொல்ல முடியாது.
பதவி விலக வேண்டும்
ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தனது கையெழுத்து தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூற முடியாது. அவர் கையெழுத்திடுவது அவருக்கு புரியவில்லை என்றால், அது நிதி, பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் உட்பட முழு நாட்டையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது.
இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. எனவே ஜனாதிபதி அல்லது அவரது செயலாளர் முழு பொறுப்பையும் ஏற்பதுடன் யாராவது பதவி விலக வேண்டும்.
இந்த விவகாரம் ஜனாதிபதியின் வெசாக் மன்னிப்பைச் சூழ்ந்துள்ளது, இதில் நிதி மோசடிக்காகத் தேடப்படும் நபர் ஒருவர் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொது மன்னிப்பு
நீதி அமைச்சகம் பட்டியலை அங்கீகரித்த நிலையில், கையெழுத்திடும் முன் அதன் உள்ளடக்கத்தை மறுபரிசீலனை செய்து புரிந்துகொள்வது ஜனாதிபதியின் கடமையாகும்.
ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் இருவருமே மௌனம் காத்ததாகவும், அவர்கள் குறைகளை கீழ்மட்ட அதிகாரிகளுக்கு மாற்ற முயற்சிப்பதாகவும் நாமல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. எனவே ஜனாதிபதி அல்லது அவரது செயலாளர் முழு பொறுப்பையும் ஏற்பதுடன் யாராவது பதவி விலக வேண்டும்.
முறையான மறுஆய்வு இல்லாமல் ஆவணங்கள் அங்கீகரிக்கப்படும் "கையெழுத்து மாஃபியா" என்று அழைக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவதாக ஜனாதிபதி அநுரகுமார தனது பிரசாரத்தின் போது உறுதியளித்தார். ஆனால் இப்போது அவரது சொந்த கையெழுத்தே இந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நாமல் ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.

இந்திய ரஃபேல் விமானம் பாகிஸ்தான் வீழ்த்தியதா... முதல் முறையாக பிரெஞ்சு உற்பத்தியாளர் விளக்கம் News Lankasri

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam
