மன்னாரில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு.. மின்சக்தி அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம்

Mannar Power cut Sri Lanka Sri Lankan Peoples Minister of Energy and Power
By Ashik Aug 05, 2026 01:25 PM GMT
Report

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் மின்வெட்டு தொடர்பில் மின்சக்தி அமைச்சர் அனுர கருணாத்திலக்கவுக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், "மன்னார் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பாதிக்கப்படுவதுடன் பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் செயலிழப்பதுடன் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக ஆண்டு ஐந்து மற்றும் கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அத்துடன் மின்வெட்டு சட்டவிரோத நடவடிக்கைக்கும் சாதகமாக அமைந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் பல தடவைகள் மின் துண்டிப்பு ஏற்படுகிறது.

கடும் சிரமத்தில் மக்கள்.. 

அரசியல்வாதிகளும் மாவட்ட நிர்வாகமும் உறக்கத்தில் உள்ளனர். மக்கள் நிலை பற்றி அவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. மன்னார் மக்களின் விருப்பமின்றி அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையால் அமைக்கப்பட்ட 40 காற்றாலைகளில் தினமும் பல மில்லியன் ரூபாவை வருமானமாக பெறுகிறீர்கள். ஆனால் மன்னார் மக்களை வேண்டுமென்றே வஞ்சிக்கிறது மின்சார சபை.

மன்னாரில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு.. மின்சக்தி அமைச்சருக்கு பறந்த அவசர கடிதம் | Continuous Power Cuts Mannar Letter To Minister

தடையற்ற மின்சாரம் தருவோம் என உத்தரவாதம் அளித்த அரசாங்கம் மின் தடையை ஏற்படுத்துகிறது. பல அமைச்சர்கள் மன்னாருக்கு வருகை தந்து மக்களுக்கு ஏமாற்று கதைகள் கூறிவிட்டு போகிறார்களே தவிர இந்த மக்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை.

வட கிழக்கிற்கு வெளியே இவ்வாறு ஏமாற்று வேலையை மின்சார சபையால் செயல்படுத்த முடியுமா? அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் எமது மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.பல மாதங்களாக ஜனநாயக ரீதியாக போராடிய எமது மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசும் மின்சார சபையும் இப்பொழுது மன்னார் மக்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகவே நாம் உணர்கிறோம்.

எம்மிடமிருந்து வருமானம் பெறும் தாங்கள் எமது மக்களுக்கு போதிய மின்சார கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் ஆகும்.அந்தப் பொறுப்பில் இருந்து மின்சார சபை விலகுவது வேதனைக்குரிய விடயம்.

ஆகவே உடனடியாக மின் கட்டமைப்புகள் சீர் செய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் தினமும் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும்.

இல்லையேல் இழப்பீடு கோரி நீதிமன்றம் நாட வேண்டி வரும். தொடர்ந்து மன்னார் மக்களை வஞ்சிப்பது அரசு நிர்வாகத்தின் இயலாமை. உடனடியாக மின் தடையை நிவர்த்தி செய்ய வழி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பு

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு: இவரை கண்டால் அறிவிக்கவும்.. பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு: இவரை கண்டால் அறிவிக்கவும்.. பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US