மோட்டார் சைக்கிள்கள் மோதி இருவர் காயம்
கந்தளாய் – பேராறு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று(10.09.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வெலிங்டன் சந்தியிலிருந்து பேராறு நோக்கி இரு மோட்டார் சைக்கிள்கள் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும், மற்றைய மோட்டார் சைக்கிளில் ஒருவருமாகப் பயணித்துள்ளனர்.

முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென வலதுபுறமாகத் திரும்ப முயன்றபோது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
இந்த விபத்து CCTV காட்சிகளிலும் பதிவாகியுள்ளது.
மோதலின் காரணமாக இரு மோட்டார் சைக்கிள்களிலும் பயணித்த மூவரும் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பிரபல வர்த்தகர் ஒருவரின் வீடொன்றிலிருந்து பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்


