முழு புரிதலின்றி வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளின் விளைவுகள்: சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி
நாட்டின் பொருளாதாரம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் வழங்கப்பட்ட அரசியல் வாக்குறுதிகளினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய வாலிபர் சங்கத்தினால் நேற்றைய தினம் (12.03.2024) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இளைஞர்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம்
இதன்போது, முழுமையான புரிதலின்றி வாக்குறுதி விடுத்தல் போன்ற அணுகுமுறைகளில் இருந்து விலகி, யதார்த்தத்தை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.
மேலும் அவர், தேசத்தின் சாதகமான எதிர்காலத்தை நோக்கி கூட்டாக செயற்படுவது அவசியம் எனவும், பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய அம்சமான ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்திற்கு விரைவாக மாற வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |