மன்னாரில் வரி செலுத்தாத வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகள் அகற்றம்
மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த விளம்பர பலகைகளானது இன்று(13.03.2024) மன்னார் நகர சபை ஊழியர்களால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நகரசபையின் அறிவுறுத்தல்
இதன்போது மன்னார் நகர சபையிடம் உரிய வரி செலுத்தி அனுமதி பெறாது உள்ளூர் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களில் நீண்ட நாட்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு நிறுவனங்களின் விளம்பர காட்சி பலகைகள் வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக இவ்வாறு காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளுக்கு அனுமதி பெற்று வரியை செலுத்தி காட்சிப் படுத்துமாறு நகரசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு, கடிதங்கள் அனுப்பப்பட்டு உரிய அனுமதியை பெறாத வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகள் மேற்கண்டவாறு அகற்றப்பட்டுள்ளது.

மேலும் நகர சபை எல்லைக்குள் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சிறு வியாபார வர்த்தக நிலையங்கள், சிற்றுண்டி நிலையங்கள் குளிர்பான நிலையங்களையும் அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மன்னார் நகரசபை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri