காமெனெய் கொலைக்கு மலேசிய பிரதமர் கண்டனம்
ஈரானின் உயரிய தலைவர் அலி காமெனெய் கொல்லப்பட்ட சம்பவத்தை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடுமையாக கண்டித்துள்ளார்.
இந்த சம்பவம் மத்திய கிழக்கை தீவிரமான மற்றும் நீடித்த நிலைதடுமாற்றத்தின் விளிம்பிற்கு கொண்டு செல்கிறது என்று அவர் தெரிவித்தார். மேலும், ஈரானுக்கும் அதன் மக்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் தலைவரை திட்டமிட்டு குறிவைத்து தாக்குதல் நடத்துவது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமைவது மட்டுமல்லாது, சர்வதேச ஒழுங்கை தாங்கி நிற்கும் அடிப்படை விதிமுறைகளையும் பலவீனப்படுத்துகிறது என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தெஹ்ரான் மிகுந்த கட்டுப்பாட்டுடன் பதிலளிக்க வேண்டும் என்றும், அனைத்து தரப்பும் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மலேசியா எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய தரப்புக்கள் உடனடி போர் நிறுத்தம், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தீவிரமான பேச்சுவார்த்தைக்கு மீண்டும் திரும்புதல் ஆகியனவற்றில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இந்த மூன்றையும் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
இந்த நெருக்கடி வன்முறையால் தீர்க்கப்பட முடியாது. இதற்கு ராஜதந்திர, கட்டுப்பாடு மற்றும் அரசியல் மனப்பாங்கு தேவை என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam