யாழ் பல்கலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திய முக்கிய ஆதாரம்
யாழ் பல்கலையில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும் அவற்றை இலகுவாக கடந்து சென்றுவிட்டதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
யாழ் பல்கலைகழகத்தை மையப்படுத்தி விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இருந்ததாக முன்னர் பேசப்பட்டது.
முக்கிய ஆதாரம்
அதனை நிரூபிப்பதற்காக இந்த செயற்பாடுகள் இடம்பெற்றதா அல்லது உண்மையிலே ஆயுதங்கள் சுமார் 15 அல்லது 20 வருடங்களுக்கு முன்னர் மறைத்து வைக்கப்பட்டதா என்று சந்தேகமும் எழுந்துள்ளது.
அதாவது கிடைக்கப்பெற்றுள்ள படங்களை அவதானிக்கையில் துப்பாக்கிகளை சுற்றியுள்ள செலோடேப் சந்தேகங்கைளை மேலும் வலுவாக்குகின்றது.
ஏனெனில் துப்பாக்கிகளை சுற்றியுள்ள செலோடேப்களை பொறுத்தவரையில் 1 வருடங்களே அதன் பாவனைக்கான காலம் இருக்கும்.
மேலும் நாட்களாகையில் அவை அதன் நிலையிழந்துவிடும், ஆனால் தற்போது மீட்கப்பட்ட ஆயுதங்களை பார்க்கும் போது அவை அண்மையில் சுற்றப்பட்டதை போலவே உள்ளது.
எனவே இவ்வாறான விடயங்கள் தற்போது பெரும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.