மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு : வயோதிப தாய் உயிர்மாய்ப்பு
யாழில் (Jaffna) மகன் வீட்டுக்கு வரவில்லை என்ற மன விரக்தியில் தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளளார்.
கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த தங்கராசா கோதைநாயகி (வயது 82) என்ற 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் இடையே முரண்பாடு
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கணவன் இறந்த பின்னர் குறித்த மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.
மகன் ஒருவர் தினமும் பிற்பகல் வேளையில் தாயின் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு காலையில் தனது வீடு செல்வது வழமை.
இந்நிலையில் நேற்றையதினம் (20) அந்த மகனுக்கும் குறித்த பெண்ணுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரி
பின்னர் மகன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் மனவிரக்தியடைந்த குறித்த பெண் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ மூட்டியுள்ளார்.
பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam
