பாடசாலை மாணவர்களுக்கிடையே மோதல் - மூவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் 10 தரம் மற்றும் 11 தரம் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அதே பகுதியைச் சேர்ந்த மூவர் காயமடைந்த நிலையில் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மூவர் வைத்தியசாலையில் அனுமதி
ஆறாம் வகுப்பிற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் மாணவர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்போது தாயொருவர் தனது மகனை 11 தர மாணவர்கள் தாக்கியதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
