கான்ஃபரன்ஸ் லீக் இறுதிப்போட்டி: ஜெர்மனியில் ரசிகர்கள் இடையே மோதல்!

Football Spain Germany Europe England
By Amal May 27, 2026 09:06 PM GMT
Report

 யுஇஎஃப்ஏ கான்ஃபரன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ஜெர்மனியின் லீப்ஜிக் நகரில் நடைபெற்ற நிலையில், இங்கிலாந்தின் கிறிஸ்டல் பேலஸ் மற்றும் ஸ்பெயினின் ராயோ வல்கானோ ஆகிய இரு அணிகளின் ரசிகர்களுக்கிடையே கடுமையான மோதல் வெடித்துள்ளது.

இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த முயன்ற ஜெர்மனி பொலிஸார் காயமடைந்துள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(27.05.2026) இரவு நடைபெற்ற இறுதிப்போட்டிக்காக இரு அணிகளின் ரசிகர்களும் லீப்ஜிக் நகரில் குவிந்துள்ளனர்.

கொங்கோவில் எபோலா - போர் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொங்கோவில் எபோலா - போர் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காயமடைந்த பொலிஸார்

நேற்று முன்தினம்(26.05.2026) மாலை நகரின் மையப்பகுதியில் உள்ள உணவகங்களுக்கு வெளியே அமர்ந்திருந்த கிறிஸ்டல் பேலஸ் ரசிகர்களை, அங்கு வந்த சுமார் 300 ராயோ வல்கானோ ரசிகர்கள் எதிர்கொண்ட போது இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது வன்முறையாக மாறியது.

ரசிகர்கள் ஒருவரையொருவர் பாட்டில்கள், பியர் கிளாஸ்கள் மற்றும் உணவக நாற்காலிகளை வீசித் தாக்கிக் கொண்டனர்.

கான்ஃபரன்ஸ் லீக் இறுதிப்போட்டி: ஜெர்மனியில் ரசிகர்கள் இடையே மோதல்! | Conference League Clashes Between Fans Germany

இதனைத் தொடர்ந்து, மற்றொரு பகுதியில் கிறிஸ்டல் பேலஸ் அணியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தீவிர ஆதரவாளர்கள் ஸ்பானிய ரசிகர்களை வம்புக்கு இழுத்து மோதலில் ஈடுபட்டபோது ஃபெடரல் பொலிஸார் அவர்களைச் சூழ்ந்து தடுத்து நிறுத்தினர்.

இந்த மோதல்களைத் தடுக்க முயன்ற கலவரத் தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது இரு தரப்பு ரசிகர்களும் பொருட்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இரண்டு பொலிஸார் இலேசான காயமடைந்தனர்.

வன்முறையைத் தொடர்ந்து 300ற்கும் மேற்பட்டோரின் அடையாளச் சான்றுகளைச் சோதித்துள்ளதாக லீப்ஜிக் பொலிஸார் நேற்று(27) தெரிவித்துள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையே மோதல்

கிறிஸ்டல் பேலஸ் மற்றும் ராயோ வல்கானோ ஆகிய இரு அணிகளுமே தங்களது வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஐரோப்பிய தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன.

இந்தப் போட்டியில் கிறிஸ்டல் பேலஸ் வெற்றி பெற்றால், இந்த ஆண்டின் முக்கிய மூன்று ஐரோப்பியக் கோப்பைகளையும் இங்கிலாந்து கிளப்களே வென்ற சாதனைக்கு வழிவகுக்கும்.

கான்ஃபரன்ஸ் லீக் இறுதிப்போட்டி: ஜெர்மனியில் ரசிகர்கள் இடையே மோதல்! | Conference League Clashes Between Fans Germany

கடந்த வாரம் ஆஸ்டன் வில்லா அணி யூரோபா லீகைக் கைப்பற்றிய நிலையில், சனிக்கிழமை(30)  நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் அர்செனல் அணி விளையாடவுள்ளது.

இதனால், ஐரோப்பியக் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் வேளையில், இந்த ரசிகர்களின் வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தீவிரம் : அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் தீவிரம் : அமைச்சரவையை கூட்டி முக்கிய ஆலோசனை

கொங்கோவில் எபோலா - போர் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொங்கோவில் எபோலா - போர் : உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US