முன்னாள் சுகாதார அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு
சுகாதார அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் விரயங்களுக்கு எதிரான மக்கள் அமைப்பு குற்ற விசாரணைப் பிரிவில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர்கள் ஏழு பேருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சுப் பதவியை வகித்த காலத்தில் குறித்த நபர்கள் ஈட்டிய சொத்து விபரங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
சொத்துக்கள் தொடர்பில் கணக்காய்வு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மேலும் கோரப்பட்டுள்ளது.
ஏ.எச்.எம். பௌசீ, நிமால் சிறிபால டி சில்வா, டொக்டர் ராஜசித சேனாரட்ன, மைத்திரிபால சிறிசேன, பவித்ரா வன்னியாரச்சி, சன்ன ஜயசுமன மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் சுகாதார அமைச்சுப் பதவிகளை வகித்த போது உழைத்த சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடு
குறித்த நபர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பிலும் சொத்து கொள்னவனவு தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்கள் குவிக்கப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஊழல் மோசடிகளுக்கு எதிரான தேசிய அமைப்பு, குற்ற விசாரணைப் பிரிவிடம் கோரியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam