இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் எச்சரிக்கை
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை உள்நாட்டு முட்டைகள் எனக்கூறி விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளில் இடப்பட்டுள்ள முத்திரையை அழித்து, உள்நாட்டு முட்டைகள் என விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக அண்மையில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சதொச நிறுவனங்கள் ஊடாக ஒரு முட்டை 43 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த முட்டைகளின் உற்பத்தி திகதி உள்ளிட்ட விபரங்கள் முத்திரையிடப்பட்டுள்ளன.
உள்நாட்டு சந்தையில் முட்டை விற்பனை
இந்த முத்திரையை அழித்து விட்டு உள்நாட்டு சந்தையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக உள்நாட்டு முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த முத்திரைகள் விசேட உபகரணமொன்றின் மூலம் அழிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
சதொச நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை கொள்வனவு செய்து அவற்றில் காணப்படும் முத்திரைகளை அழித்து விட்டு ஒரு முட்டை 50 ரூபா என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |