துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு மில்லியன் ரூபா இழப்பீட்டு
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தறை - வெலிகமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் குடும்பத்துக்கு 4.2 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த உபுல் சமிந்த என்ற அதிகாரியின் குடும்பத்துக்கே இவ்வாறு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த இழப்பீட்டு தொகையில் ஜனாதிபதி செயலகம் 2.5 மில்லியன் ரூபாயையும், இலங்கை பொலிஸ் திணைக்களம் 1.7 மில்லியன் ரூபாயையும் வழங்கியுள்ளன.
பொலிஸ் உத்தியோகத்தர்
வெலிகம விருந்தகம் ஒன்றுக்கு அருகாமையில் பொலிஸார் மேற்கொண்ட யுக்திய சோதனையின் போதே உபுல் சமிந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இழக்காகி உயிரிழந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்தார்.
இவ்வாறு கடமையாற்றிய நிலையில் உயிரைத் தியாகம் செய்த பொலிஸ் அதிகாரியின் இழப்பிற்காக அவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
