பிணைக்கு பின்னர் ரணில் தொலைபேசியில் தொடர்புகொண்ட முதல் நபர்
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பிணை வழங்கப்பட்ட பின்னர் முதலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தொலைபேசியில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதன்படி“ தனக்காக எடுத்த நடவடிக்கைகளுக்கு உங்களுக்கும், எதிர்க்கட்சித் தரப்புக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என ரணில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை
மேலும் "தான் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.
அதன் பிறகு, அனைத்துத் தலைவர்களையும் சந்திப்பேன்," என்று ரணில் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதில் வழங்கிய சஜித், இந்த செயல்முறையை நான் எப்போதும் நிறுத்த மாட்டேன்” என கூறியுள்ளார்.
தற்போது ரணில் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.





ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
