தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி : அரசு தரப்பில் விளக்கம் கொடுத்த அமைச்சர் சந்திரசேகர்
அநுர அரசாங்கம் இல்லையென்றால், டிட்வா புயலால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க முடியாதிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு மற்றும் புதிய படகுகள் வழங்கும் நிகழ்வு இன்று (11.03.2026) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார்.
நஷ்ட ஈடு வழங்கி வைப்பு
இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வனிதா செல்லப்பெருமாள், கால் நடை மற்றும் காணி விவசாய அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் கே. திலகநாதன், சீனோ நிறுவன பணிப்பாளர் அஜித் எதிரிசிங்க உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மட்டக்களப்பில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட 16 கடற்றொழில் அமைப்புகளுக்கு சுமார் ரூ. 2 கோடி 69 இலட்சம் 70 ஆயிரம் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டு, 12 கடற்றொழிலாளர்களுக்கு புதிய மற்றும் திருத்தப்பட்ட படகுகள் மற்றும் இயந்திரப்படகுகள் அமைச்சரால் வழங்கப்பட்டன.
அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் சுனாமி, வெள்ள அனர்த்தங்களில் மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாமல் அரசியல்வாதிகள் அந்த பணங்களை கையகப்படுத்தி வந்தனர். தற்போது சிறந்த அரசியலை முன்னெடுத்தல் மூலம், மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும், கடந்த கால கொள்ளைகள் நிறுத்தப்பட்டதால் மக்களுக்கு பயனுள்ள அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், வளைகுடாவில் ஏற்பட்ட போர் நெருக்கடிகள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வுகள் இன்றைய நெருக்கடியை பெருக்கும்.
போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்
இந்நிலையில், நாங்கள் மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருட்களை சேகரித்து வைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

அநுரகுமார திசாநாயக்க ஆட்சியதிகாரத்தினை பொறுப்பேற்காவிட்டிருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.
டிட்வா புயலால் மீன்பிடித்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 100 கோடி ரூபா அளவிற்கு சேதங்கள் ஏற்பட்டிருந்தது. இதனை மீன்பிடித்துறையை கட்டியெழுப்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், நாட்டில் முழுநாட்டினையும் ஒன்றிணைக்கும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் பொலிஸ், இராணுவம், புலனாய்வு, குடிவரவு, நடிகர்- நடிகைகள் ஆகிய அனைத்து பகுதிகளிலும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நச்சுப்போதைப்பொருளை நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்கும் வரை எமது செயற்பாடு தொடரும் என்றார்.

விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam