வலுக்கும் மத்திய கிழக்கு போர்.. கடுமையான சிக்கலில் இலங்கை
இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேச கடல் பகுதியில் நங்கூரமிட்டுள்ள 19 ஈரானியக் கப்பல்களின் மாலுமிகளுக்கு உதவி வழங்குவதற்கு முன்பு எங்கள் தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்போம் என்று அரசாங்கம் தெரிவித்தது.
ஈரானிய கப்பல்களின் மாலுமிகள் உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கப்பல்களுக்குப் பொருட்களை வழங்கும் இலங்கை நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதிக்கக்கூடும் என்ற அபாயமே முக்கியக் கவலையாக இருப்பதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாமியக் குடியரசுக்கு எதிராகக் கூட்டுத் தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவும் ஈரானும் போரில் ஈடுபட்டுள்ளன.
எழுந்துள்ள அச்சம்..
மேலும், “எந்தவொரு உதவியையும் பரிசீலிப்பதற்கு முன்பு இலங்கை தனது தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்கும். மேலும், கப்பல்களுக்குப் பொருட்களை வழங்கும் நிறுவனங்கள், அமெரிக்காவிலிருந்து வரக்கூடிய இரண்டாம் நிலைத் தடைகள் குறித்து அறிந்திருக்கின்றன” என்று செய்தித் தொடர்பாளர் துஷாரா ரொத்ரிகோ செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், கப்பல்களுக்கு உடனடி உதவி எதுவும் வழங்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இருப்பினும், கப்பல்களுக்கு உதவ முடிவு செய்தால் பின்விளைவுகள் ஏற்படும் என்று அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு எந்தத் தகவலும் வரவில்லை என துஷாரா தெளிவுபடுத்தினார்.
அவரின் கூற்றுப்படி, அந்தக் கப்பல்கள் இலங்கைக் கடற்கரையிலிருந்து 24 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன. இவ்விடயம் குறித்து தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்று ஈரான் தூதரகம் கூறியது.
இந்நிலையில், ஈரானிய கப்பல்களுக்கு உதவினால் இலங்கைக்கு பாரிய நிதி நெருக்கடி ஏற்படலாம் என அச்சம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பரபரப்பாகும் சவூதி விமான நிலைய தாக்குதல்! 12 பேர் பலி - பலரின் நிலைமை கவலைக்கிடம்: மூடப்படும் வான்வெளிகள்
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan