அவசர உபாதைகளுக்காக அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்
கோவிட் நோயாளர்கள் மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ள நபர்களுக்கான அவசர உபாதைகளுக்காக அம்பியூலன்ஸ் சேவை இன்று வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேசத்திற்கான விசேட கோவிட் தடுப்பு செயலணி கூட்டம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது இதனை தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சமூக சேவைகள் நிறுவனமான அல் கிம்மா நிறுவனத்தினது அம்பியூலன்ஸ் வண்டியானது ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தரித்திருக்கும்.
அவசர தேவைகளுக்கு நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்குத் தொடர்புகளை ஏற்படுத்தும் பட்சத்தில் சேவை வழங்கப்படும்.
இதில் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தனிமைப்படுத்தலில் உள்ள நபர்களுக்கான அவசர உபாதைகள் ஏற்படும் பட்சத்தில் சமூக சேவைகள் நிறுவனமான அல் கிம்மா நிறுவனத்தினது அம்பியூலன்ஸ் வண்டியினூடாக சேவையை வழங்கச் சுகாதார அலுவலக பிரிவிற்கு அல் ஹிம்மா நிறுவனம் தனது அம்பியூலன்ஸ் வண்டியினை வழங்கியுள்ளது.
இவ்வாறான அவசர நிலைமைகளின் போது மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.நௌபர் தொடர்பு இலக்கம் 0767658828, 0759994009 மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் எம்.ஏ.சி.நியாஸ் தொடர்பு இலக்கம் 0779915841 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எம்.நௌபர், அல் கிம்மா
நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.ஹாருன், பிரதேச செயலக
உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச பள்ளிவாசல்களின்
பிரதிநிதிகள், ஜனாசா நலன்புரி அமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள்,
அரிசி ஆலை உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan