தம்பிஐயா பாலசிங்கத்தின் நினைவாக நினைவு மலர் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு
முன்னாள் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் சமாச பொது முகாமையாளர் அமரர் தம்பிஐயா பாலசிங்கத்தின் நினைவாக நினைவு மலர் மற்றும் நினைவு முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, யாழ்ப்பாணம் ஆழியவளையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
34 வருடங்களாக சேவையாற்றி கடந்த வருடம் இறைபதம் அடைந்த அமரர் தம்பி ஐயா பாலசிங்கத்தின் சேவையை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்வு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் கு. உதயகுமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நினைவு முத்திரை
யுத்த காலத்தில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் பல இலட்சம் பெறுமதியான சொத்து ஆவணங்களை பத்திரமாக எடுத்துச் சென்று மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைத்த தம்பி ஐயா பாலசிங்கத்தின் வரலாறும் இதன் போது நினைவு கூரப்பட்டது.
இதன்போது, அமரர் தம்பி ஐயா பாலசிங்கத்தின் நினைவு முத்திரை மற்றும் நினைவு மலர் வெளியிடப்பட்டதுடன் தம்பி ஐயா பாலசிங்கத்தின் மகன் உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன், நிகழ்வில் பொதுமக்கள், அரச ஊழியர்கள், என பலர் கலந்து கொண்டதுடன் தம்பி ஐயா பாலசிங்கம் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |