யாழில் அர்ச்சுனாவால் கோபமடைந்த அரச ஊழியர்கள்
நேற்றையதினம் இடம்பெற்ற யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) கலந்து கொண்டு குழப்பம் விளைவித்துள்ளார்.
குறித்த கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்..
விசரனை வெளியேற்றுங்கள்....
இதன்போது, முன்னுக்குப் பின் முரணான கேள்விகளை கேட்டதுடன், அங்கிருந்தவர்களுடனும் அவர் முரண்பட்டுள்ளார்.

மேலும், வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கருத்துத் தெரிவிக்கும் போது இடையில் குறுக்கிட்டு தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தனக்கு கருத்துக்கள் வெளியிட உரிமை உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாதிட்டதுடன், சி.வி.கே.சிவஞானத்தைப் பார்த்து உங்களது பெயர் என்ன என்றும், எனக்கு உங்களது பெயர் தெரியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அங்கிருந்த சிலர் முகம்சுழித்துள்ளனர். அத்துடன், பல விமர்சனங்களை அர்ச்சுனா அங்கு முன்வைக்கும் போது, அங்கிருந்த அரச ஊழியர்கள் சிலர் ”இந்த விசரனை இங்கிருந்து வெளியேற்றுங்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri