சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 2500 ரூபாய் 5000 ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்கள், குழந்தைகள் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் குரு அபிமானி திட்டத்தின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, இந்த புதிய கொடுப்பனவு ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை மூலம் அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த கொடுப்பனவை வழங்குமாறு பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் யமுனா பெரேரா பணிப்புரை விடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan