தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல்: விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தான தியாகி பொன். சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள தியாகி பொன். சிவகுமாரனின் நினைவிடத்தில் இந்த ஈகைச்சுடரேற்றல் மற்றும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஏற்கனவே மேற்கொண்டுள்ளது.
தமிழ் மக்களுக்கு எதிராகக் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் போராடிய பொன். சிவகுமாரன், கடந்த 1974ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் திகதி உரும்பிராயில் வைத்து அப்போதைய ஸ்ரீலங்கா பொலிஸாரினால் கைது செய்யப்படவிருந்த தருணத்தில், தன்னுயிரை ஈகம் செய்யும் நோக்குடன் வீரச்சாவடைந்தார்.
வீர மரணம்..
தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் வகையில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 'பல்கலைக்கழக அனுமதி தரப்படுத்தல்' முறைக்கு எதிராகத் தீவிரமாகப் போராடிய அவர், தமிழ் மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துக்கொண்டார்.

1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது நடத்தப்பட்ட படுகொலைகள் உட்பட, தமிழ் மக்கள் மீது ஏவிவிடப்பட்ட அரச வன்முறைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி, இளம் வயதிலேயே தனது உயிரைத் தியாகம் செய்தார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாகவும், ஆயுத ரீதியிலான அடக்குமுறைகளுக்கு எதிரான துணிச்சலின் வடிவமாகவும் திகழும் தியாகி பொன். சிவகுமாரனின் தியாகத்தை நினைவுகூர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை ஆண்டுதோறும் இந்நாளை உத்தியோகபூர்வமாக அனுஷ்டித்து வருகின்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாகப் பங்கெடுக்குமாறு அரசியல் பிரதிநிதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை அழைப்பு விடுத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan