லண்டனில் நடைபெற்ற ஜூலை கலவரத்தின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல்
ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாததும் அரச பயங்கரவாதத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றதுமான 1983 ஜூலைக் கலவரத்தின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் அஞ்சலி நிகழ்ச்சியும் புலம்பெயர் தமிழ் மக்களாலும், தமிழ் இளையோர்களாலும் இலண்டன் (London) மாநகரில் முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும் ஐக்கிய இராச்சியத்தின் தமிழ் இளையோர் அமைப்பும் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு நேற்று (23.07.2024) பிற்பகலில் இலண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் இடம்பெற்றது.
தமிழின அழிப்பு
“தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் 41 ஆண்டுகள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இவ்வஞ்சலி நிகழ்வில் இலங்கை அரசினைக் கண்டிக்கும் முகமான ஆர்ப்பாட்டப் பேரணியும், பல தசாப்தங்களாகத் தொடரும் தமிழின அழிப்பு தொடர்பான ஆவண நிழற்பட காட்சிப்படுத்தலும், உறுதியேற்பு நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் பாரிய அளவிலான தமிழ் இளையோர்கள் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டு இலங்கை அரசினை கண்டிக்கும் கோசங்களை எழுப்பியதுடன், இலங்கை அரசினை தண்டிக்குமாறும் பிரித்தானியாவின் புதிய அரசு மற்றும் உலகநாடுகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
40 ஆண்டுகளைக் கடந்தும் சிங்களவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாத தமிழ் மக்கள் : சீமான் ஆதங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |