யாழில் கோவில் நகைகைகளை கொள்ளையிட்ட பூசகர்
யாழ்ப்பாணம் (Jaffna) - ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பூசகரிடமிருந்து மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் மேலதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸாரால் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, சந்தேக நபர் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு உத்தரவிடப்பட்டது.
பாதுகாப்பு பெட்டகம்
இதன்படி, பூசகரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது மேலும் 22 பவுண் நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டட்டுள்ளன.

ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 62 பவுண் நகைகள் மற்றும் 8 இலட்சம் ரூபா பணம் என்பன காணாமல் போயிருந்தன.
இது தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆலயப் பெட்டகம் உடைக்கப்படாத நிலையில், போலிச் சாவிகளைகளைப் பயன்படுத்தி நகைகள், பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்கள் கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
பொலிஸ் விசாரணை
மேலும், விசாரணை இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது என்ற மக்களின் குற்றச்சாட்டு, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குச் சென்றதை அடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அவர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவுக்கு மாற்றினார்.

அதன்பின்னர், குறித்த அதிகாரிகள் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் 28 வயதுடைய பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் ஆலயத்திருவிழாவின் போது உதவி பூசகராகச் செயற்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த நபரிடம் இருந்து 40 பவுண் நகைகள் மீட்கப்பட்டதுடன், ஏனைய நகைகள் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டிருந்தது.
இந்நிலையில், பொலிஸாரின் விசாரணைகளின் போது திருடப்பட்ட நகைகள் அனைத்தும் தற்போது மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan