கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்து விபத்து : பலர் காயம்
திருகோணமலை (Trincomalee) தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியின் 96ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (10) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன் பேருந்து பாதையை விட்டு விலகியே விபத்துக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் சாரதி, நடத்துநர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவ இடத்துக்கு தம்பலகாமம் போக்குவரத்து பொலிஸார் வந்துள்ளதுடன் நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
