நான்காவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் (Photos)

Protest Colombo People Today Sri Lanka Economic Crisis
By Jenitha Apr 12, 2022 12:10 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முற்று முழுதான அரசினுடைய திட்டமிடப்படாத நடவடிக்கையும், முறையற்ற நிதி நிர்வாகம் முழு காரணமாக இருக்கின்றது.

இந்நிலையில், மக்களின் அன்றாட வாழ்கை சுமை நிறைந்த ஒன்றாக நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டது. உயிர் வாழ்வதற்காகவும் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வதற்காகவும் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள்தான் அவர்களை இவ்வாறு ஒன்றுகூடவும் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழவும் செய்திருக்கின்றன.

இதனால், கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப் போராட்டமானது இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது இந்த மக்கள் எழுச்சி.

நான்காவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் (Photos) | Colombo Protest People Sl Today Economiccrisis

“ கோட்டா கோ ஹோம்” என்று எங்கு பார்த்தாலும் மக்களின் குரல்கள் அரசாங்கத்திற்கு எதிராக ழுழங்கமிடுகின்றது.

இந்நிலையில் தான் மக்களின் போராட்டத்தை உணர்ந்த, அதனால் ஏற்பட்ட பயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் வாழ்க்கை முடியப்போவதை அறிந்துகொண்ட கூட்டணிக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள்.

இவ்வளவு காலமும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசியலில் இவ்வாறான பாரிய மாற்றம் ஏற்பட, லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்ட மக்கள் எழுச்சிதான் காரணமாகும்.

நான்காவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் (Photos) | Colombo Protest People Sl Today Economiccrisis

கடந்த வாரம் முதல் இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராகப் பொதுமக்கள் இரவும் பகலுமாக வெயிலிலும் மழையிலும் ஒன்றுதிரண்டிருக்கிறார்கள். சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்திகளில் இந்த மக்கள் எழுச்சியும், இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.

என்னதான் அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தியிருந்தும், நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை விதித்திருந்தும், சமூக வலைதளங்களைத் தடைசெய்திருந்தும் அனைத்துச் சமூகங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் ஒன்றாக, குழந்தைகளைக்கூட கைகளில் ஏந்தியவாறு தெருவில் இறங்கி கோஷங்களை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்கள்.

இந்த மக்கள் அனைவருமே சுயேச்சையாகத்தான் ஒன்றுதிரண்டிருக்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

எந்த அரசியல் கட்சியையோ அமைப்பையோ இனத்தையோ சமூகத்தையோ சார்ந்தவர்களாக எவருமில்லை. சுயேச்சையான இந்த மக்கள் போராட்டத்தைத் தமது கட்சியின் போராட்டமாகச் சித்தரித்துக்கொள்வதற்காக அதில் கலந்துகொள்ள வந்த அமைச்சர்களையும், எதிர்க்கட்சி அமைச்சர்களையும், பௌத்த பிக்குகளையும் பொதுமக்கள் கூச்சலிட்டு, விரட்டியடித்திருக்கிறார்கள்.

நான்காவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் (Photos) | Colombo Protest People Sl Today Economiccrisis

இவ்வாறானதொரு பிரம்மாண்டமானதும் ஒருமித்ததுமான மக்கள் எழுச்சி இதுவரை இலங்கையில் நிகழ்ந்ததேயில்லை.

அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்து, ஜனாதிபதி அதே அமைச்சர்களை அழைத்து வேறு பிரதானமான அமைச்சுப் பொறுப்புகளை வழங்கியுள்ளமை மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

இலங்கையில் இன்று தீவிரமாகியிருக்கும் இந்த மக்கள் எழுச்சிப் போராட்டமானது, மக்களை இந்த நெருக்கடிக்குள் தள்ளிய அரசாங்கத்துக்கும், அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் எதிரான போராட்டமாகும்.

ஜனநாயகத்துக்காகப் பொதுமக்கள் ஒன்றுதிரண்டிருக்கும் இந்தப் போராட்டமானது, இலங்கை போன்ற ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுள்ள, பலவீனமான ஆட்சியுள்ள, மோசடிகளும் ஊழல்களும் சர்வாதிகாரமும் நிறைந்த, இனவாதத்தையும் மதவாதத்தையும் பரப்பி மக்களிடையே குரோதத்தை வளர்க்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடும். 

நான்காவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் (Photos) | Colombo Protest People Sl Today Economiccrisis

நான்காவது நாளாக தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் (Photos) | Colombo Protest People Sl Today Economiccrisis

                        

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US